நீருந்து நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நேற்று ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வினியோகம் பிரச்சினை சம்பந்தமாக இலுப்பநகரம், மூங்கில்தொழுவு கிராமத்தில் உள்ள நீருந்து நிலையங்களில் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story