திருத்துறைப்பூண்டியில், பொதுமக்களுக்கு நீர்மோர்-தர்பூசணி


திருத்துறைப்பூண்டியில், பொதுமக்களுக்கு நீர்மோர்-தர்பூசணி
x

திருத்துறைப்பூண்டியில், பொதுமக்களுக்கு நீர்மோர்-தர்பூசணி

திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவின் சார்பில் கோடைக்காலத்தையொட்டி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்குதல் மற்றும் வாகன ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சிக்கு தாசில்தார் காரல்மார்க்ஸ், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, பேரிடர் பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறியாளர் செல்வகணபதி பேசுகையில்,

பருவநிலை மாறுபாட்டினால் கோடை வெயிலின் தாக்கம் சராசரி அளவைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருகிறது. இதனால் அனல்காற்று வீசும். மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு வெப்பநோய்கள் ஏற்படும். இதனால் வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பகல்நேரங்களில், தேவையின்றி வெளியில் செல்லவேண்டாம். நீர்சத்துள்ள பானங்கள், பழங்களை உண்ண வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கால்நடைகளை ஈரசாக்குகளை கீழே போட்டு கட்டவேண்டும். எளிதில் தீப்பிடிக்காத வகையில் மண்எண்ணெய் விளக்குகளை கையாளவேண்டும். வாணவெடிகளை தவிர்ப்பது நல்லது. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றக் கூடாது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். இதில் திருத்துறைப்பூண்டி டவுன் அரிமா சங்க தலைவர் வேதமணி, செயலாளர் சபரிநாதன், பொருளாளர் தினகரன், டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் காளிதாஸ், முன்னாள் செயலாளர் பாலமுருகன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story