ராட்சத குழாய் உடைந்து பீறிட்டு வௌியேறும் குடிநீர்


ராட்சத குழாய் உடைந்து  பீறிட்டு வௌியேறும் குடிநீர்
x
திருப்பூர்


திருப்பூர் ராயபுரம் பெத்திசெட்டிபுரம் முதல் வீதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள ராட்சத குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பீறிட்டு வெளியேறி வருகிறது.

ராட்சத குழாய்களில் உடைப்பு

திருப்பூர் ராயபுரம் பெத்திசெட்டிபுரம் முதல் வீதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் ராட்சத குடிநீர் குழாய்கள் உள்ளன. இந்த குழாய்கள் மூலம் திருப்பூரின் பல பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பெத்திசெட்டிபுரம் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ராட்சத குழாய் ஒன்றில் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடைக்குள் விழுந்து வீணாகி வந்தது. அதன்பின் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் குடிநீர் பீறிட்டு வெளியேறி வீணாகி வருகிறது. அதுபோல் அதே பகுதியில் உள்ள மற்றொரு குழாய் பழுதடைந்து உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

ராட்சத குழாய் உடைந்து பீறிட்டு வௌியேறும் குடிநீர்

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள நீராதாரங்களில் நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. இவ்வாறு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ச்சியாக குடிநீர் வீணாகி வருவது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட மேலும் வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது. எனவே அதிகாரிகள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story