குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 27 Jun 2023 9:38 PM IST (Updated: 28 Jun 2023 12:43 PM IST)
t-max-icont-min-icon

பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்துவருகிறது.

திருப்பூர்

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவிலிருந்து சினி பார்க் சினிமா தியேட்டர் வழியாக சேரன் நகர், கணபதிபாளையம், செவந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இச்சாலை திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்கும், தாராபுரம் சாலையை சென்றடைவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்தும் பல மாதங்களாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையின் நடுவே குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் பலரும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்துவருகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்றனர்.


Next Story