நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் ஒரு திரையரங்கின் அருகே சாலையின் இருபுறமும் எதிர் எதிர் திசைகளில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மன்னார்குடி தேரடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை அமைப்பின் மாநில தலைவர் ராம அரவிந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் கபிலன், இணைச்செயலாளர் முகமது இஸ்மாயில், நகர செயலாளர் பழனி, நகர இணை செயலாளர் குமரேசன், மகளிர் பாசறை நகர பொறுப்பாளர் சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.