நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2023 1:15 AM IST (Updated: 3 Jan 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஓமலூர்:-

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குடியேற்றத்தை கட்டுப்படுத்தி நுழைவுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த கோரியும், தீவட்டிப்பட்டி ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரியும் தீவட்டிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நல்லான் தலைமை தாங்கினார். கட்சியின் ஓமலூர் தொகுதி தலைவர் மோகன், தொகுதி செயலாளர் காளியப்பன், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கோபால், இணை செயலாளர் முருகன், துணைத்தலைவர் நிரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story