நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அம்மாப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை ஒன்றியம், கோவிலூர் கடைவீதியில் நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், நபிகள்நாயகம் குறித்து விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பா.ஜனதா அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் ராஜப்பா தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் ரஜிஸ்குமார், செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.கிருஷ்ணகுமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மன்னார்குடி தொகுதி தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







1 More update

Next Story