நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு


நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு
x

நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு

நாகப்பட்டினம்

சிக்கல்

மொழிப்போர் தியாகியும், தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும், மூத்த தமிழறிஞருமான இலக்குவனார் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி சார்பில் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார். வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர் முத்துக்குமரன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ஆதித்தன், தொகுதி தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை ஒன்றிய செயலாளர் கோபி, திருமருகல் ஒன்றிய செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story