குருமகா சன்னிதானத்தை தோளில் சுமப்போம்- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை


குருமகா சன்னிதானத்தை தோளில் சுமப்போம்- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
x

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து செயல்பட்டுவரும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குருமுதல்வரின் குருபூஜை தினத்தில், சமீபத்தில் நடத்துவதாக செய்யப்பட்டிருந்தது. தருமை ஆதீனத்தின் 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்க இருந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக பா.ஜ.க. சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்து, ஆதீனத்தின் பல்லக்கை நானே தோளில் சுமப்பேன் என்றும், பாரம்பரியமிக்க பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடையை மீறி நடத்திக் காட்டுவோம் என்று நான் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். தமிழ் மொழியையும், தமிழ் சமுதாயத்தையும் தாங்கிப் பிடித்த தருமை ஆதீனத்தின் பல்லக்கை என் தோளில் சுமக்கப்போகிறேன் என்று சொன்ன போதே நான் அதைக் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதி மகிழ்ந்தேன். தமிழர் மானம் காக்க, தமிழக பா.ஜ.க. தலைமை ஏற்று வருகிறது. தாமரைச் சொந்தங்கள் எல்லாம் தங்கள் படை திரட்டி, சீறும் சிங்கமென சிலிர்தெழுந்து வாருங்கள். நாளை (இன்று) நாம் அனைவரும் தருமை ஆதீனத்தில் ஒன்று கூடுவோம். குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மையான மடத்தின் தெய்வீக திருவருள் பெற்ற குருமகா சன்னிதானத்தை தோளில் சுமப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story