உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம் - எடப்பாடி பழனிசாமி


உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம் -  எடப்பாடி பழனிசாமி
x

'சென்னை தினம்' இன்று கொண்டாடப்படுவதையொட்டி உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384-வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 'சென்னை தினம்' இன்று கொண்டாடப்படுவதையொட்டி உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

சாதி மத பேதமின்றி வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமின்றி கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் விளங்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று.

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 384. உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம்.சென்னையின் பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் மெட்ராஸ் தின வாழ்த்துகள். இது நம்ம சென்னை என தெரிவித்துள்ளார்.


Next Story