நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
x

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. தொடங்கி வருகிற 17-ந் தேதியுடன் 50 ஆண்டுகள் முடிந்து 51-வது ஆண்டு தொடங்குகிறது.

இதை கொண்டாடுவது குறித்து கோவை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை இதயதெய்வம் மாளிகையில் நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சி கொறாடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. மாநாடு

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

இந்த கட்சியை தொடங்கிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஏழை-எளிய மக்களை சந்தித்து அவர்களின் நிலையை அறிந்து பல திட்டங்களை கொண்டு வந்தார்.

அதே வழியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் செயல்பட்டார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

ஆனால் நீட் தேர்வு தொடர்பாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து உள்ளது. அனைத்து பகுதிக ளிலும் சாலை மோசமாக இருக்கிறது. எந்த பணிகளும் நடக்க வில்லை.

லஞ்சம் அதிகரித்து விட்டது. 51-வது ஆண்டு விழாவை யொட்டி நடக்கும் அ.தி.மு.க. பொதுகூட்டங்களை மாநாடு போல நடத்தி காட்ட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொடியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்க ளிடம் கூறும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வ தை அமைச்சர்கள் கேட்பது இல்லை.

இதனால்தான் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அ.தி.மு.க.வுக்கு பொது மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெறுவோம். அதுபோன்று சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.

முடிவில் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.


Next Story