10-ந் தேதி நெசவாளர்கள் ஊர்வலம்


10-ந் தேதி நெசவாளர்கள் ஊர்வலம்
x

பட்டு நெசவு தொழிலை பாதுகாக்கக்கோரி 10-ந் தேதி நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று உதவி கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருணகிரி சத்திரத்தில் ஆரணி பட்டு கைத்தறி தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொறுப்பாளர்கள் பரமாத்மன், பரணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஆரணி பகுதியில் பாரம்பரியமிக்க பட்டு கைத்தறி நெசவாளர்கள் சுமார் ஒரு லட்சம் பேரை பாதிப்பில் இருந்து மீட்க வேண்டும்.

பட்டு கைத்தறியில் தயாரிக்கப்பட்டு வரும் பட்டுசேலை டிசைன்களை அரசின் விதிமுறைகளை மீறி விசைத்தறிகளில் பவர்லூம் செய்து பட்டு சேலை விற்பனை நிலையங்களுக்கு ஆய்வு செய்து தடுக்க வேண்டும்,

புவிசார் குறியீடு பெற்றுள்ள ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து, வறுமை நிலையை நோக்கி செல்வதை தவிர்த்திடும் வகையில் வருகிற 10-ந் தேதி ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் நெசவாளர்களுடன் ஊர்வலமாக சென்று உதவி கலெக்டர் எம்.தனலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்குவது,

தமிழக அரசும் கைத்தறி துறையும் ஆரணியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் விசைத்தறிவில் பட்டு சேலைகள் தயாரிக்கும் நெசவு கூடங்களை ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பட்டு சேலை தயாரிப்பாளர் சங்க தலைவர், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சி.அப்பாசாமி, வீரபத்திரன், பி.கண்ணன் உள்பட நெசவாளர்கள் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story