திருமண விழா
திருமண விழா
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் எம்.மணிலால் நாடார்- சகாயம் அம்மாள் தம்பதி பேரனும், எம்.அரவிந்த்- ஏ.லதா தம்பதி மகனும், எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளருமான ஏ.அஜேஸ்லாலுக்கும், கரைசுத்துபுதூர் லோகநாதன்-ஜெயந்தி தம்பதி மகள் டாக்டர் சோனாவுக்கும் திசையன்விளையில் நெல்லை செல்வி மகாலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மாலையில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி கலையரங்கில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், மார்க்கண்டேயன், ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மேயர் மகேஷ், நெல்லை மேயர் சரவணன், நெல்லை துணை மேயர் ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், ஜோசப் பெல்சி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை எஸ்.ஏ.வி. குடும்ப சேர்மன் கிரகாம்பெல் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.