காதலர் தினத்தில் பொது இடங்களில் உலா வரும் காதலர்களுக்கு திருமணம்; இந்து முன்னணி தீர்மானம்


காதலர் தினத்தில் பொது இடங்களில் உலா வரும் காதலர்களுக்கு திருமணம்; இந்து முன்னணி தீர்மானம்
x
தினத்தந்தி 12 Feb 2023 8:30 PM GMT (Updated: 2023-02-13T02:00:38+05:30)

காதலர் தினத்தில் பொது இடங்களில் உலா வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி

தேனியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். கிழக்கு நகர தலைவர் செல்வம், செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நாளை (செவ்வாய்க்கிழமை) காதலர் தினத்தன்று பெற்றோருக்கு தெரியாமல் பொது இடங்களில் உலா வரும் இளம் காதலர்களுக்கு அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் இந்து முன்னணி சார்பில் திருமணம் செய்து வைப்பது, இந்து கலாசாரத்தை சீரழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் காதலர்களை கண்டிப்பது, திருமண வயதை எட்டாத நிலையில் காதல் என்ற பெயரில் உலா வருபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story