களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம் - புகை மண்டலமான சென்னை...!


களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம் - புகை மண்டலமான சென்னை...!
x
தினத்தந்தி 24 Oct 2022 9:59 PM IST (Updated: 24 Oct 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் இரவில் மக்கள் அனைவரும் வண்ண வாணவெடிகள், கம்பி மத்தாப்பு, புஸ்வானம், தரச்சக்கரம், பட்டாசு உள்ளிட்டவைகளை வெடித்து கோலாகலமாகவும், ஆனந்தமாகவும் கொண்டாடினர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், கிண்டி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை என நகரின் பல பகுதிகளிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. சாலைகளே தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தனர்.

1 More update

Next Story