அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்


அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்
x

அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

திருச்சி

பண்டிகை காலத்தை முன்னிட்டு அகமதாபாத் மற்றும் திருச்சி ஜங்ஷன் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் வண்டி எண் 09419 இன்று (வியாழக்கிழமை) மற்றும் 13, 20, 27-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளில் (வியாழக்கிழமை மடடும்) அகமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாளான சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 09420 திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 9, 16, 23, 30-ந் தேதிகள் மற்றும் அடுத்தமாதம் 7, 14, 21, 28-ந் தேதிகள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.45 மணிக்கு புறப்பபட்டு மறுநாள் திங்கட்கிழமை இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்று அடையும். இந்த ரெயில் வதோரா, சூரத், புனே, சோலாப்பூர், ரெய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story