மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்கடம்பூரில் வேளாண்மை அதிகாரி ஆய்வு


மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்கடம்பூரில் வேளாண்மை அதிகாரி ஆய்வு
x

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் ,இக்கிறதா? கடம்பூரில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மக்காச்சோளம் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானி ச.சரவணகுமார், சத்தியமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் வேலுசாமி, வேளாண்மை அதிகாரி உமாமகேஸ் ஆகியோர் மாக்கம்பாளையத்தில் படைப்புழு தாக்குதலுக்குள்ளான பயிர்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்கு கடைபிடிக்க வேண்டிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும், தேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.


Next Story