தொப்பூருக்கு வந்தமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
தர்மபுரி:
தொப்பூருக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் வருகை
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது. தொப்பூரில் நடந்த இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைக்க தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தார். பின்னர் அவர் கார் மூலம் தொப்பூருக்கு வந்தார். அவருக்கு தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது, கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், ஆகியோர் பொன்னாடை கொடுத்து வரவேற்றனர்.
நடந்து வந்த முதல்-அமைச்சர்
முகாம் நடந்த அரசு பள்ளியில் இருந்து விழா நடைபெற்ற பந்தல் வரை முதல்-அமைச்சர் நடந்து சென்றார். அப்போது தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் வழியில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ.மணி, ரேணுகாதேவி, சப்தகிரி உமாசங்கர், ராஜாகுமாரி, கிருஷ்ணகுமார், ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சோலை மணி, வேலுமணி, சரஸ்வதி துரைசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.சிவகுரு, ஒன்றிய செயலாளர்கள் ஏ.எஸ்.சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, கருணாநிதி, சபரிநாதன் முருகேசன், செல்வராஜ், அடிலம் அன்பழகன், வேடம்மாள், சக்திவேல், மாது, சேட்டு, கோபால், கிருஷ்ணன், செங்கண்ணன், சௌந்தரராஜன். பி.கே.அன்பழகன், சந்திரமோகன், சரவணன், முத்துக்குமார், முனியப்பன், சிவப்பிரகாசம், நெப்போலியன், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் பெரியண்ணன், கௌதம், பூவண்ணன், வானவில் சண்முகம், ஹரி விக்னேஷ், காசிநாதன், ரஹீம், விஜயன், முத்துலட்சுமி, போர்வெல் ராஜி, பெருமாள், பழனிசாமி, ஸ்டாலின், பத்மா, நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர்கள் முருகவேல், பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர்கள் பி.சி.ஆர். மனோகரன், வெங்கடேசன், கேஸ் மணி, இந்திராணி சூர்யா தனபால், பிருந்தா, பேரூராட்சி துணைத்தலைவர்கள் சீனிவாசன், கார்த்திகா, மல்லிகா, சூர்யா தனபால், பேரூராட்சி செயலாளர்கள் கௌதமன், மோகன், முல்லை ரவி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ராஜகோபால், கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன், அசோக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் துரை பாண்டியன், தனலட்சுமி முனுசாமி, கௌரம்மாள், பிரபு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நீலா மாரியப்பன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முருகவேல், பேரூராட்சி கவுன்சிலர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.