அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நாமக்கல் மாவட்டம் வழியாக சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சென்றார்.

அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட எல்லை பகுதியான எம்.மேட்டுப்பட்டியில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் நாமக்கல்லில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வசந்தபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, நவணி, ஆண்டகளூர்கேட் உள்ளிட்ட 9 இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story