பாரத் ரத யாத்திரைக்கு வரவேற்பு


பாரத் ரத யாத்திரைக்கு வரவேற்பு
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பாரத் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் கல்வி திட்டங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக அமல்படுத்தப்படும் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். 7-வது ஊதியக்குழுவின்படி நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து பாரத் ரத யாத்திரை தொடங்கியுள்ளது. இந்த யாத்திரையானது கடந்த 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி டெல்லியில் நிறைவடைகிறது.

இந்நிலையில் இந்த ரத யாத்திரை நேற்று கரூருக்கு வந்தது. இதற்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார கூட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story