நெல்லையில் புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு வரவேற்பு


நெல்லையில் புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு வரவேற்பு
x

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு சென்று வந்த புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் வடநாட்டு ஆன்மிக யாத்திரையில் கலந்து கொண்டு நெல்லை திரும்பிய பரசமய கோளரிநாத ஆதீனத்தின் 39-வது குரு மகா சன்னிதானம் புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு நெல்லை டவுன் பகுதி மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு கொழு காட்சி பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் ஆதீன மடத்தின் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பரசமய கோளரிநாத ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் 1400 ஆண்டுகள் பழமையான ஆதீனம் ஆகும். நமது ஆதீனத்திற்கு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடம் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிரமாண்டமாக உள்ளது. இந்த கட்டிடம், மிகப்பெரிய இடையூறுக்கு மத்தியில் தெய்வசக்தியால் 2 ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய பெருமையை தந்துள்ளார். தமிழ் ஆதீனங்கள் முன்னிலையில் தற்போது செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. நேர்மையும், தொன்மையும் உடையதாக செங்கோல் நிறுவப்பட்டு இருக்கிறது. தமிழக ஆதீனங்களுக்கு மரியாதை அளித்து அனைத்து வகையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு சிறப்பாக செய்து கொடுத்தது. தமிழகம் புண்ணிய பூமி என்பதை பிரதமர் நிரூபித்து உள்ளார். தமிழ் ஆதீனங்களுக்கு மட்டுமே புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தமிழ் கலாசாரம், பழமையை எடுத்துரைக்கவே தமிழ் ஆதீனங்கள் அழைக்கப்பட்டனர். தாமிரபரணி நதிக்கு நாடு முழுவதும் நல்ல பெயர் உள்ளது. அந்த நதியை பாதுகாக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story