வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு
விழுப்புரம், திண்டிவனத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் 1 மணிக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்தது. அப்போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அஜய்குமார் மீனா, சாமிநாதன், ரெயில் நிலைய மேலாளர் ராஜன் மற்றும் ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் மலர் தூவி வந்தே பாரத் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்துக்கு சென்றது. அப்போது அங்கு பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல ரெயில்வே மேலாளர் பிரிவு-3 ஆனந்த், சீனியர் டி.இ.என்.காமராஜ், மண்டல ரெயில் உபயோகிப்பாளர் பரிந்துரை குழு உறுப்பினர் கபில் கோல்ச்சா உள்ளிட்ட பலர் வரவேற்றனர். இந்த வரவேற்பின் போது பொதுமக்கள் பலர் வந்தே பாரத் ரெயில் முன் நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.