வந்தே பாரத் ரெயிலுக்கு அரக்கோணத்தில் வரவேற்பு


வந்தே பாரத் ரெயிலுக்கு அரக்கோணத்தில் வரவேற்பு
x

விஜயவாடா-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கு அரக்கோணத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

சென்னை-நெல்லை, விஜயவாடா-சென்னை உள்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரெயில் விஜயவாடா மற்றும் சென்னை இடையே தெனாலி, ஓங்கோல், நெல்லூர் மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுகிறது. திருப்பதி செல்லும் பயணிகளுக்கு வசதியாக திருப்பதியை இணைக்கும் வழியாக ரேணிகுண்டா உள்ளது.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கும், செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கும் என 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

தற்போது விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்படி நேற்று இரவு சுமார் 8.40 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த வந்தேபாரத் ரெயிலை கொட்டும் மழையில் பா.ஜ.க.வினர் கூடியிருந்து வரவேற்றனர்.

அப்போது பயணி சிவக்குமார் என்பவர் கூறுகையில் அரக்கோணத்தில் நிற்காத இந்த வந்தே பாரத் ரெயிலால் இப்பகுதி மக்களுக்கு பயன் ஏதும் இல்லை. பொதுமக்கள், வியாபாரிகள் பயனடையும் வகையில் அரக்கோணத்தில் இந்த வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story