மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி
x

காட்பாடியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலியானார்.

வேலூர்

குடியாத்தம் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30). வெலடிங் தொழிலாளியான இவர் காட்பாடி பாலாஜி நகர் விரிவு பகுதியில் உள்ள ஒரு பல் கிளினிக்கின் பெயர் பலகையை மாற்ற நேற்று வந்தார்.

இரண்டாவது மாடியில் இருந்த பெயர் பலகையை மூன்றாவது மாடிக்கு எடுத்து செல்ல அவருக்கு இரண்டு பேர் உதவி செய்தனர். அப்போது பெயர் பலகையில் இருந்த மின் ஒயர், மின் கம்ப ஒயரில் உரசியது. இதனால் பெயர் பலகையை பிடித்திருந்த மூன்று பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

அந்த நேரத்தில் மற்ற 2 பேரும் தப்பிய நிலையில் விஷ்ணு தூக்கி வீசப்பட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story