மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் 310 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் 310 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் பாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்குமரன், அருண்மொழி தேவன், துயர் துடைப்பு தனி தாசில்தார் ஜெயசெல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்ப அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். இதில் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். முகாமில் மொத்தம் 878 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் 310 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி வழங்கினார். இதில் டாக்டர்கள் அருண், ஸ்ரீலதா, கதிரேசன், சித்ரா, கற்பகம், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தலட்சுமி, தொழில்நுட்ப அலுவலர்கள் விஜயபாஸ்கர், முனியப்பன், வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட பல்வேறு அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.