விடுதி மாணவ- மாணவிகளுக்கு நல உதவிகள்


விடுதி மாணவ- மாணவிகளுக்கு நல உதவிகள்
x
தினத்தந்தி 12 Dec 2022 1:00 AM IST (Updated: 12 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் விடுதி மாணவ- மாணவிகளுக்கு நல உதவிகளை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:-

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டியில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதிகளில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு போர்வைகள் உள்ளிட் டநல உதவிகளை, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் ஜெயச்சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூராட்சி துணை தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story