மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்
கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் வழங்கினார்.
திட்டச்சேரி:
கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாம்
திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.
தாசில்தார் ரமேஷ், தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகள்
சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்கினார். இதில் மண்டல துணை தாசில்தார் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன், வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.