மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்
x

தென்காசியில் நடந்த சிறப்பு முகாமில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

தென்காசியில் நடந்த சிறப்பு முகாமில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

சிறப்பு முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.85 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டது.

முகாமில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற உபகரணங்கள் மிகுந்த பயனளிக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story