100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

பஞ்சப்பள்ளி அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி

பாலக்கோடு

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர் குமார், பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சுற்று வட்டா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அரசின் திட்டங்கள்

அப்போது கலெக்டர் பேசுகையில், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், ஏராளமான அரசு திட்டங்கள் இருந்தும் பயனடையாமல் நாம் இருக்கிறோம். அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து சந்தேகங்கள் இருந்தால் மக்கள் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Next Story