300 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


300 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

தோரணம்பதி ஊராட்சியில் 300 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் தோரணம் பதி ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை சார்பில் பழ செடிகள் தொகுப்பு மற்றும் இடுபொருட்கள், தென்னங்கன்று, உயிர்உரங்கள், தெளிப்பான்கள் வழங்கும் நிகழ்ச்சி தோரணம்பதி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பி.தீபா தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துறை அலுவலர் சவுந்தர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 320 விவசாயிகளுக்கு ரூ.48 லட்சம் மதிப்புள்ள பழ செடிகள், மலைப்பயிர் தொகுப்பு, சொட்டுநீர் பாசனம் மற்றும் உயிர் உரங்கள், தெளிப்பான்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் கயல்விழி, மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கே.ஏ.குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் சதீஷ் நன்றி கூறினார்.


Next Story