58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

மாடப்பள்ளி கிராமத்தில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் வரவேற்றார். முகாமில் ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ., திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா. லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு 58 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, சலவைப் பெட்டி, வாரிசு சான்று, பட்டா மாற்றம், தென்னங்கன்றுகள், மருந்து தெளிப்பான் என ரூ.6 லட்சத்து 41 ஆயிரத்து 600 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

முகாமில் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் கஸ்தூரி ரகு, இளவரசி இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், தனி தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பேசினார்கள். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மேனகா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story