மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள்குறைதீர்வு நாள் கூட்டத்தில், கலெக்டர் வளர்மதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள் வேண்டி, பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.

நலத்திட்ட உதவி

மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 16 மாணவ- மாணவிகள், அதற்கான ஆணையை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி, முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story