ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; பா.ஜனதாவினர் வழங்கினர்


ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; பா.ஜனதாவினர் வழங்கினர்
x

தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா மருத்துவ பிரிவு சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி இந்தியன் மெடிக்கல்ஸ் அசோஷியேஷன் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ரங்கதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வாழ்த்தி பேசினார்.

விழாவில் மாநில பா.ஜனதா மருத்துவ பிரிவு தலைவர் பிரேம்குமார் துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசுகையில், இந்தியாலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கு நெருங்கப்பட்டு விட்டது. இது மக்கள் நலன் காக்கும் பா.ஜனதா அரசின் மிகப்பெரும் சாதனையாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி இந்த இலக்கை நெருங்கி உள்ளோம். இந்த தடுப்பூசி இலக்கு எட்டும் நாள் பா.ஜனதா சார்பில் மிகப்பெரும் விழாவாக கொண்டாடப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story