ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர்

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 506 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

242 மனுக்கள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 242 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 36 மதிப்பிலான சலவை பெட்டியும், 10 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 395 மதிப்பிலான தையல் எந்திரமும், உலமா மற்றும் பணியாளர் நலவாரியம் மூலம் 23 பேருக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 25 மதிப்பிலான சைக்கிள்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 13 பேருக்கு ரூ.76 ஆயிரத்து 50 மதிப்பிலான தையல் எந்திரமும் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 506 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ்

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் 2021-22-ம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த விடுதி காப்பாளர்கள் மற்றும் சிறந்த விடுதிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு தொகை மற்றும் கேடயமும் கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பாலசந்திரன், மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் அழகிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story