158 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்


158 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 13 July 2023 12:50 AM IST (Updated: 13 July 2023 4:24 PM IST)
t-max-icont-min-icon

பாணாவரத்தை அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 158 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

மனுநீதிநாள் முகாம்

பாணாவரத்தை அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நெமிலி தாசில்தார் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 276 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 89 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவி

முகாமில் பட்டா மாற்றம், ஆண் குழந்தை இன்மை சான்று, கல்வி ஆவணங்கள் தொலைந்ததற்கான சான்று, விதவை சான்று, சிறு குறு விவசாயிகள் சான்று, வாரிசு சான்று, இறப்பு சான்று, கலப்பு திருமண சான்று, முதியோர் ஓய்வூதியம், தையல் எந்திரங்கள், பவர் டில்லர், சொட்டு நீர் பாசன உபகரணங்கள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி என மொத்தம் 158 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெருமாள், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story