உணவு டெலிவரி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் - முதல்-அமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்


உணவு டெலிவரி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் - முதல்-அமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்
x

நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை,

கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின விழா உரையில், உணவு டெலிவரி மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனி நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த வகையில், இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான 'கிக்' (Gig) தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்கும் வகையில் தனியே நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதற்காக இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story