வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன் தலைமையில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன் தலைமையில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில்.
வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன் தலைமையில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயன்சாமி கோவில் பகுதியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மரக்கன்றுகள் நடும்பணியை துவக்கி வைத்தார், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி கே.வி.பழனிசாமி நகரில் புதிய முழு நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார், அப்பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட த்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பிலான 12 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்,
புதுப்பை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பிலான 16 பணிகளை துவக்கி வைத்தார், உத்தமபாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார், கண்ணபுரத்தில் ரூ 3 கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராசி கே.ஆர். முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி. நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் யூ.பி. அழகரசன் மற்றும் அறநிலையத்துறை வருவாய்த்துறை உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.