மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசியது என்ன? - வானதி சீனிவாசன் விளக்கம்


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசியது என்ன? - வானதி சீனிவாசன் விளக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2023 1:56 PM IST (Updated: 4 Oct 2023 9:44 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசியது என்ன? என்பது குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொடிசியாவில் நடந்த நிகழ்ச்சியில் 1 லட்சம் வங்கி கணக்குகளுக்கு ரூ. 3,749 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா,ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மகிழ்வாக இருந்தார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சினைகளுக்காக மட்டுமே நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். கடனுதவி வழங்கும் விழா அரசு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். சென்னையில் நேற்று கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மாநில தலைவர் இல்லாமல் கோட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story