அண்மையில் நெகிழ வைத்த சம்பவம் என்ன? முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அளித்த பதில்
உங்களில் ஒருவன் என்ற பகுதியில் மக்களின் கேள்விகளுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்
சென்னை,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? பதில்:- சிறைக்கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். ராமநாதபுரத்தை சேர்ந்த பெரியவர் - 92 வயதான பாலகிருஷ்ணன், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார்.
தன் வாழ்நாள் எல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். இதைப் பலரும் பின்பற்ற வேண்டும். கே:- 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது? யார் மேலேயும் நம்பிக்கை இல்லாமலோ இந்த ஆய்வுத் திட்டத்தை நான் தொடங்கவில்லை. எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்கிற மனநிறைவை நான் அடைவதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.