அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பது என்ன ஆனது? சீமான் கேள்வி


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பது என்ன ஆனது? சீமான் கேள்வி
x

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பது என்ன ஆனது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வுக்கான விலக்கு மாநில அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்திருந்தும், புதிய சூத்திரம் வைத்திருக்கிறோம், ரகசியத்திட்டம் வைத்திருக்கிறோம், அவற்றால், நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறுவோம் என மேடைதோறும் முழங்கினார்கள். உங்கள் ஆட்சியில் இதோ இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம், ரகசியமெல்லாம்?.

சமூக நீதியின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் தரப்படும் என்றீர்கள். இப்போது நிதிநிலை சரியான பிறகு கொடுப்போம் என்றும் சாக்கு போக்குச் சொல்கிறீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய முறையா?.

ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? எனவே தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றிவிட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story