பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன..? கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கேள்வி
விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய என கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த நிகழ்வு மாணவர்களின் நினைவில் வரும் என்பதால், மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அப்போது 9-12ம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய சூழலை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதாக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story