அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் எப்போது? - ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம்


அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் எப்போது? - ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம்
x

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் எப்போது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

செனனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. தேர்தலில் இதற்கான தாக்கம் நிச்சயம் இருக்கும்.

சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் அரசைக் கண்டு பயமில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை.

திமுக அமைச்சர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. ஜமீன்தார், குறுநில மன்னர்கள் போல் அவர்கள் செயல்படுகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கட்சி பணிகள் தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



1 More update

Next Story