பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு


பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2024 9:00 PM (Updated: 13 Sept 2024 9:00 PM)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது. புரட்டாசி மாத பிறப்பன்று (17-ந் தேதி) பவுர்ணமி வருவதாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது

1 More update

Next Story