2024ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும் போது நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் இந்தியாவில் ஏற்படும் - அண்ணாமலை டுவீட்
2024ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும் போது நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் இந்தியாவில் ஏற்படும் என அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த 9 வருடங்களாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதற்காக எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
2024ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும் போது நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் இந்தியாவில் ஏற்படும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story