ஜல்லிக்கட்டு மைதானம் எப்போது திறப்பு? - அமைச்சர் மூர்த்தி பதில்


ஜல்லிக்கட்டு மைதானம் எப்போது திறப்பு? - அமைச்சர் மூர்த்தி பதில்
x
தினத்தந்தி 8 Jan 2024 5:30 AM GMT (Updated: 8 Jan 2024 5:32 AM GMT)

அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை,

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கிராம பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது.

அதன்பின் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் 23 அல்லது 24-ந்தேதி திறக்க உள்ளதாகவும் அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்றார்.

மைதானத்தில் என்னென்ன வசதிகள்?

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக்கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில் வளைவு, காளைகள் சிற்பக் கூடம், உட்புறச் சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, மாடுகள் நிறுத்தம் இடத்தில் புல் தரைகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.


Next Story