மின்சார கட்டண தொகையை பார்த்தாலே 'ஷாக்' அடிக்கிறது


மின்சார கட்டண தொகையை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது
x
தினத்தந்தி 9 Dec 2022 7:00 PM GMT (Updated: 9 Dec 2022 7:01 PM GMT)

தமிழகத்தில் மின்சார கட்டண தொகைைய பார்த்தாலே ‘ஷாக்’ அடிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பால் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. மின்சாரத்தை தொட்டால்தான் 'ஷாக்' அடிக்கும், தற்போது மின்சார கட்டணத்தை பார்த்தாலே 'ஷாக்' அடிக்கிறது. அந்த அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. இப்போது தேர்தல் வைத்தாலும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். வருகிற நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு பொதுமக்கள் வாக்களித்து ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பீர்முகமது வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின்போது, விலைவாசி உயர்வு காரணமான தி.மு.க. ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் நாகூர் கனி மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், சுரேஷ், குமரேசன், பாண்டிராதா, செல்லப்பாண்டி அறிவி, சுதாகர், முருகேசன், கோபி உள்பட பலர் கலந்துெகாண்டனர்.


Next Story