ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எங்கு உள்ளது? - உமர் அப்துல்லா கேள்வி
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எங்கு உள்ளது என்று முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மீனம்பாக்கம்,
சென்னை விமான நிலையத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறும் பிரதமர் மோடி, அப்போது ஏன் இங்கு இதுவரை தேர்தல் நடத்தவில்லை.
ஜனநாயக திருவிழா கொண்டாட வேண்டும் என்றால் எங்களுக்கு ஜனநாயகத்தை தர வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஜம்மு நகரில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.