ஆலயத்திற்கு சென்ற வேளையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை


ஆலயத்திற்கு சென்ற வேளையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
x

குளச்சல் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம், குளச்சல் வடக்கு கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் எபிராஜ் (வயது 44).இவர் சொந்தமாக டிம்போ வைத்து ஓட்டி வருகிறார்.இவரது மனைவி ஸ்ரீகலா(35). இன்று அதிகாலை எபிராஜ் வேலை விஷயமாக திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்,ஸ்ரீகலா இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 9 மணியளவில் அருகில் உள்ள ஆலயத்திற்கு தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து சென்றுள்ளார்.வீட்டின் முன் பக்க கதவை பூட்டி சாவியை பின்பக்கம் வைத்திருக்கிறார்.

பின்னர் 10.15 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய போது சாவியை எடுக்க பின்பக்கம் சென்ற ஸ்ரீகலா பின் பக்க கதவு திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கம் ரூ.1லட்சம் மற்றும் 6 பவுன் மதிப்பு மிக்க கம்மல்,மோதிரம்,நெக்லஸ் ஆகியவையும் திருட்டு போனது தெரிய வந்தது. ஆலயத்திற்கு சென்ற வேளையில் மர்ம நபர்கள் வீடு புகுந்து பணம்,நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குரித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமையும் குளச்சல் அருகே வழுதலம்பள்ளத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story