பக்தர்களுக்கு சாட்டையடி


பக்தர்களுக்கு சாட்டையடி
x

ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள சாட்டையடி வாங்கினர்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே அத்திப்பலகானூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் பூவோடு பற்ற வைத்தல் நடந்தது. நேற்று காலையில் பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். அப்போது கோவில் பூசாரி பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாட்டையடி வாங்கினர். இதையடுத்து இன்று (புதன் கிழமை) அம்மை அழைத்தல் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) வண்டி வேடிக்கை, எருதாட்டம் நடைபெறுகிறது. அதையடுத்து 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.


Next Story