விசில் ஊதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
விசில் ஊதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் காதுகேளாதோர் வாய்பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான வாய் பேசமுடியாத, காதுகேளாதவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், அரசு முக்கிய அலுவலகங்களில், பொது ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் தங்களுக்காக மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும், தொகுப்பூதியத்தில் வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். தங்கள் கோரிக்கையை கூற முடியாது என்பதால் விசில் அடித்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story